டிடிவி: அம்மா உணவகத்தை மூடுவதற்காக திமுக செய்யும் திட்டம் – மக்கள் பசியாறுவதை தடுத்தால் ஆளும் கட்சிக்கு நல்ல பாடம் புகட்டப்படும்!
சென்னையில் மாநகராட்சியில் தற்பொழுது கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தற்பொழுது செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் அதிகளவு வருவாய் இழப்பீட்டை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.அதனால் அதனை மூடும் படி கோரிக்கை வைத்துள்ளார்.ஆனால்,மேயர் வழக்கம்போல் அம்மா உணவகம் செயல்படும்,ஆனால் அதிகளவு வருவாய் இழப்பீடு தரும் அம்மா உணவகம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.இதுகுறித்து தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது.
ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 29, 2022
அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 29, 2022
ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.
ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 29, 2022
அம்மா உணவகத்தை மூடினால் ஏழை எளிய மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.