டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக!

0
172
TTV: Favorable verdict for Edappadi in AIADMK case.. Open talk about alliance! Amamukha is able to think for itself!
TTV: Favorable verdict for Edappadi in AIADMK case.. Open talk about alliance! Amamukha is able to think for itself!

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக!

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக அம்மாவின் திட்டங்களை முடக்குவதிலேயே கண்ணாக உள்ளது. அந்த வகையில் அம்மா உணவகம் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி மூட படிப்படியாக திட்டம் அமைத்து வருகின்றனர்.

அம்மா உணவகத்தால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் அதனால் எத்தனை ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது. அரசே குறைந்த விலையில் நல்ல தரமான உணவை அளிக்கிறது என்று பலரும் பாராட்டுக்கள் அளித்துள்ளனர். திமுக, அம்மா கொண்டு வந்த திட்டங்களை முடக்க வேண்டும் அல்லது அதனை ஸ்டாலின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை வைத்துள்ளது.

ஆதரவற்றவர்களுக்கு அட்சய பாத்திரமாக இருப்பது தான் அம்மா உணவகம். இதனை முடக்க நினைத்தால் பாமர மக்கள் சிறிதும் திமுகவை மன்னிக்க மாட்டார்கள். அதேபோல திராவிட மாடல் என்று பேசிவிட்டு தற்பொழுது அது செயல்படுத்த முடியாமல் ஸ்டாலின் விழி பிதுங்கி கொண்டிருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தற்போது ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவே திமுக பாடுபடுகிறது தவிர மக்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று மாஸாக பேசுவதாக நினைக்கிறார். அவ்வாறு உதயநிதி அமைச்சரானால் தற்பொழுது உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய்து விடுவாரா? தற்பொழுது திமுக வந்த பிறகு போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தான் முன்வருவாரா என்று பேசினார். அவ்வாறு உதயநிதி அமைச்சரானால் தற்பொழுது இரண்டு படங்கள் நடிக்கிறார் என்றால் அப்பொழுது நான்கு படங்கள் நடிப்பார் அவ்வளவுதான்.

தற்பொழுது தமிழகத்தில் சட்ட ஒழுங்கானது சீர்குலைந்து சந்தி சிரிக்கும் நிலைமை வந்துவிட்டது. அதேபோல காவல்துறையைக் கூட அவர்களின் வேலையை செய்ய விடுவதில்லை. அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுயமாக சிந்திக்க கூடியது. இபிஎஸ் உடன் கூட்டு சேர மாட்டேன் என்ற பாணியில், ஒருபோதும் நயவஞ்சக கூட்டத்தில் நான் சேர மாட்டேன் என நாசுக்காக கூறினார்.

மேலும் எடப்பாடி உடன் சேர்ந்து செயல்பட்டது தவறு என்பதை தற்போது தான் பன்னீர்செல்வம் உணர்ந்ததாக தெரிவித்தார்.ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிக்கும் வகையில் தீர்ப்பு வந்தாலும் மக்கள் நாளடைவில் இது பெரும் தவறு என்று உணர்வார்கள். அதுமட்டுமின்றி எடப்பாடி-யிடம் இரட்டை இலை இருந்தால் அதற்கான மரியாதை கூடிய விரைவில் இழந்து விடும் என்று குற்றம் சாட்டினார்.

Previous articleஅரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்!
Next articleபள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!