காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

Photo of author

By Parthipan K

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

Parthipan K

Tucson teacher brutally tortured 5-year-old child!!

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் சோட்டு என்பவர் டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தன்னிடம் படித்து வரும் ஐந்து வயது குழந்தையை காட்டுமிராண்டியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ஆசிரியர் ஐந்து வயது குழந்தையை கம்பால் கடுமையாக தாக்கியது தெரிகிறது.

கம்பு உடைந்த நிலையில் மறுமுனையை பிடித்து மீண்டும் அக்குழந்தையை தாக்கியுள்ளார். விட்டு விடுங்கள் என்று கெஞ்ஜியபடி குழந்தை அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்து போய் அழுது கொண்டிருந்தார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் குழந்தைகளின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் ஆசிரியரின் பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து தம்சம் செய்தார்கள். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் டியூசன் ஆசிரியரை அமர் காந்தை உடனடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட டியூஷன் ஆசிரியர் விசாரணை செய்த போது அவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மிக அதிகமாக டென்ஷன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.