டும் டும் டும்! ராஜஸ்தானில் சித்தார்த்திற்கு முறைப்படி நடைபெற்ற 2-வது திருமணம்!

Photo of author

By Gayathri

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் “சித்தார்த்”. இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான “பாய்ஸ்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான “சித்தா” என்னும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியான “மகா சமுத்திரம்” என்னும் படத்தில் சித்தார்த்தும், பிரபல நடிகை அதிதி ராவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம்தான் இவர்கள் காதலிக்கத் தொடங்கினர் என்று தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து, கடந்த மார்ச் மாதம் தங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தெலுங்கானாவில் உள்ள ஒரு பழமையான கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது, இவர்களுக்கு இரண்டாவது முறை திருமணம் நடக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி, நவம்பர் 27, 2024 அன்று ராஜஸ்தான் பிஷன்கார்கில் இருக்கும் அலியா என்னும் கோட்டையில் இந்து முறைப்படி இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் குறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ், “The best thing to hold on to in life is each other” என்று தனது சமூக வலைத்தளங்களில் சேர்ந்து பதிவிட்டுள்ளனர்.