பல நன்மைகளை தரும் மஞ்சள்!!! ஆனால் இதில் இத்தனை பக்க விளைவுகள் இருக்கின்றதா!!!

Photo of author

By Sakthi

பல நன்மைகளை தரும் மஞ்சள்!!! ஆனால் இதில் இத்தனை பக்க விளைவுகள் இருக்கின்றதா!!!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கிருமிநாசினியாக பயன்படும் மஞ்சளில் நன்மைகள் அதிக அளவு இருந்தாலும் அதே அளவுக்கு தீமைகளும் இருக்கின்றது. மஞ்சளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. அந்த பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மஞ்சளை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகள்…

* இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மஞ்சளை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு மஞ்சளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவது பாதிக்கப்படும். மேலும் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் மஞ்சளை மிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இரும்புச்சத்து 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

* அளவுக்கு அதிகமாக மஞ்சளை பயன்படுத்தும் பொழுது சிறுநீரகத்தில் கல் ஏற்படுகின்றது. அதாவது மஞ்சளில் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. இது அதிகளவில் உடலில் சேரும் பொழுது சிறுநீரகத்தில் கல் ஏற்படுகின்றது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் மஞ்சளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது ரத்த சர்க்கரை அளவை குறைத்து விடுகின்றது.

* மஞ்சளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்தம் உறைதல் தடுக்கப்படுகின்றது. மேலும் அதிகமான இரத்தப் போக்கை ஏற்படுத்துகின்றது.

* மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருளை ஒரு நாளுக்கு 1000 மில்லி கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. அதாவது வாயுப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு, வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

* பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 1 மாதம் முதல் 4 மாதம் வரை மஞ்சளை 0.45 கிராம் முதல் 3.6 கிராம் வரை எடுத்துக் கொண்டு வந்தால் அவர்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகின்றது.