உங்கள் தலையில் புதிதாக எட்டி பார்த்துள்ள வெள்ளை முடி அதாவது இளநரையை மீண்டும் கருமையாக மாற்ற கெமிக்கல் இல்லாத ஒரு நேச்சுரல் ஹேர் பேக் ட்ரை பண்ணுங்கள்.
இதை தயாரிக்க பீட்ரூட்,செம்பருத்தி இலை உள்ளிட்ட ஆறு பொருட்கள் தேவைப்படுகிறது.நீங்கள் தொடர்ந்து இந்த ஹேர்பேக் பயன்படுத்தி வந்தால் உங்கள் நரைமுடி கரு கருன்னு மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)பீட்ரூட் – ஒன்று
2)செம்பருத்தி இலை – நான்கு
3)மாவிலை – நான்கு
4)நெல்லிக்காய் – நான்கு
5)மருதாணி இலை – ஒரு கப்
6)காபி தூள் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு நான்கு செம்பருத்தி இலை,நான்கு மாவிலை,நான்கு நெல்லிக்காய்,ஒரு கப் மருதாணி இலை ஆகியவற்றை காய்ந்த நிலையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
3.காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பீட்ரூட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
4.இப்பொழுது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அரைத்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி கிளறுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி காபி தூளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு தயாரித்த கலவையை ஆறவிடுங்கள்.
5.பிறகு இதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.தயாரித்த ஹேர்பேக் முடியில் நன்கு ஊறிய பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்கள்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி கருப்பாக மாறும்.
6.இந்த ஹேர் பேக்கை ஒருமுறை பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை முடி கருமையாக இருக்கும்.தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி நிரந்தரமாக கருமையாகும்.