உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையம் 2 வது இடம்

தூத்துக்குடி விமான நிலையம் 1992ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்த உள்நாட்டு விமான நிலையம் ஆகும்.

இது தூத்துக்குடியிலிருந்து 16 கிமீ தொலைவில் வாகைக்குளத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல் 13, 2018 முதல் ISO 9001:2015 தரத்தை பெற்றது.

தமிழகத்தில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 5வது இடம்.

தனியார் விமான அமைப்பு ஒன்று, உலகிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் கண்காணித்து விமானம் புறப்படும், தரையிறங்கும் கால நேரத்தை .கண்காணிக்கும்.

விமானம் சரியான நேரத்தில் புறப்படும், தரையிறங்கும் நேரத்தை வைத்து விமான நிலையங்களை 100 இடத்தில் பட்டியலிட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி விமான நிலையம் உலகில் 2வது இடத்தில் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கான பட்டியலை ஜப்பான் நாட்டில் உள்ள நகஷிபிட்ச்சு விமான நிலையம் முதல்ல இடத்தையும், தூத்துக்குடி விமான நிலையம் 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

 

 

 

 

 

Leave a Comment