டிவி மொபைல் போன் பைக்  விலை குறைகிறது! பட்ஜெட் 2023-2024 இன் அதிரடி சலுகைகள்! 

0
341

டிவி மொபைல் போன் பைக்  விலை குறைகிறது! பட்ஜெட் 2023-2024 இன் அதிரடி சலுகைகள்! 

நாடாளுமன்றத்தின் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்த பின்னர்  ஒரு நாள் கழித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது கடைசி பட்ஜெட் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டைப் போலவும் இந்தாண்டும் எந்த பொருட்களின் விலை குறையும், விலை உயரும் என்று பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதன்படி சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23%-இல் இருந்து 11% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி விலை குறைவன:

1. மொபைல் போன், கேமரா, டிவி உதிரி பாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5% ஆக குறைவு.

2. கேமரா உதிரி பாகங்கள், லென்ஸ்கள், மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கு வரி விலக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு.

3. மின்சார வாகன பேட்டரிகளின் வரிக்குறைப்பு.

4. பொம்மைகள் மிதிவண்டி கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவு.

5. கேமரா, மொபைல் போன்களின் லென்ஸ், டிவி பேனல்களின் திறந்த கலங்களின் பாகங்கள்.

6. நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால், அமில தர பிளோர்ஸ்பார்

7. இறால் உள்நாட்டு உற்பத்தி.

விலை உயரும் பொருட்கள்: 

1. தங்கம், வெள்ளி,  பித்தளை, வைரம், சிகரெட், உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு.

2. ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு.

3. மின்சார சமையலறை புகை போக்கி.

4. தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்கள்.

5. செம்பு ஸ்கிராப்,  கலவை ரப்பர், மற்றும் சிகரெட்டுகள்.

6. தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் உள்பட 35 பொருட்களுக்கான விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த  நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்  உள்ளபடி பல அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இதற்கான பரிந்துரை பல அமைச்சகங்களின் ஆலோசனையின் பெயரில் தயார் செய்யப்பட்டது.

 

Previous articleஅடையாள ஆவணமாகிறதா? பான் கார்டு! மத்திய பட்ஜெட்டில் வெளிவந்த திடீர் அறிவிப்பு!
Next articleசுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here