TVK: விஜய் சுற்றுப்பயணம் அவருக்கு பாதுகாப்புத் தன்மையற்றதாக இருக்கும் மென்பதால் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற போட்டியானது இவர் மற்றும் ரஜினி-க்கிடையே இருந்து வந்தது. குறிப்பாக தங்களின் ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவிலும் குட்டி ஸ்டோரி என்று ஆரம்பித்து இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த குட்டி ஸ்டோரி அனைத்து ரசிகர்களுகிடையேயும் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இவர்கள் போட்டியானது இருந்து வந்த நிலையில், விஜய் அரசியலுக்குள் நுழைந்த போது அப்படியே அமைதியானது.
இருப்பினும் ரஜினி ரசிகர்கள் தற்போது வரை விஜய்க்கு எதிர்ப்புதான் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக விஜய் தெரிவித்திருப்பதில் ரஜினி ரசிகர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் தோறும் வரும்பொழுது நாங்கள் கட்டாயம் அழுகிய முட்டை கொண்டு அடிப்போம் என கூறிய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.
இதனை கண்டிக்கும் விதமாக ரஜினி தரப்பும் இது மிகவும் தவறான செயல் ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் மேற்கொண்டு இவ்வாறான பதிவுகளை இணையத்தில் பரப்பாதீர்கள் என்று அறிவுறுத்தியிருந்தனர். இந்த பிரச்சனை அடங்கி முடிவதற்குள் அடுத்ததாக சீமான், விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் பேச்சுவார்த்தையில் நடத்தியதற்கு, பணம் கொழுப்பு என பேசினார். இவருக்கு எதிராகவும் தவெக தொண்டர்கள் திரள் நிதி திருடன் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு விஜய்க்கு எதிராக ஒருவர் பின் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பற்ற தன்மையையே காட்டுகிறது. இதனை முன்னிறுத்தியே தற்போது மத்திய அரசு இவருக்கு Y-ப்பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.