TVK DMK: விஜய் திமுக-வின் கூட்டணி கட்சிகளை கலைக்க திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை அதிமுக திமுக பாஜக என அனைவரையும் பாதிக்கும் விதமாக தான் உள்ளது. முன்னதாகவே அதிமுகவின் வாக்கு வங்கி உடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த கட்சிகளின் வாக்கு சதவீதமானது குறையக்கூடும். இந்த நிலையில் விஜய் தனது மாநாட்டின் பொழுதே கட்சி சார் எதிரி யார் என்று தெரிவித்துவிட்டார். அந்த வகையில் திமுக பாஜக என்பவருடன் கூட்டணி இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளக்கியது.
இவரின் அடுத்த கட்ட டார்கெட்டாக திமுகவின் கூட்டணியை உடைப்பதாகவே உள்ளது. அதில் தான் திமுகவின் அடக்கு முறையை உடைக்கும் விதமாக விஜய் புது கொள்கையை கையில் எடுத்தார். கட்டாயம் ஆட்சியில் பங்கு தரப்படும் என கூறினார். இதனால் ஆளும் கட்சிக்கு அதன் கூட்டணிகள் அழுத்தம் கொடுக்க தொடங்கியது.
தற்சமயம் விடுதலை சிறுத்தை கட்சியானது வெளியேறும் நிலையில் தான் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டுள்ள முடியாத நிலையை திமுக உருவாக்கியது. இவரின் அடுத்த நகர்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. தற்பொழுது இக்கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முதலாளாக விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்பொழுது வரை விஜய் திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குறித்து தனது விமர்சனங்களை தெரிவித்த நிலையில் மாற்றுக் கட்சியினர் குறித்து வாய் திறக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் வலுப்பெற்ற கூட்டணி கட்சியாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். இவரின் இந்த அடுத்த கட்ட நகர்வானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்துள்ளது.