தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது.
அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசினார்.
முகவர்கள் கருத்தரங்கு இன்றும் நடந்தது. இன்று முகவர்கள் முன் பேசிய விஜய் ‘அண்ணா சொன்னதை நினைவில் வைத்து எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக மக்களை சந்தியுங்கள். மக்களிடம் செல். மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ் என அண்ணா கூறினார். சிறுவாணி நீர் போல சுத்தமான ஆட்சி அமையும். தெளிவான உண்மையான வெளிப்படையானது தவெக.
வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. வெற்றியை அடைவதற்கு உங்களின் செயல்பாடுகள் முக்கியம், நீங்கள்தான் முதுகெலும்பு. நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக இல்லை என சொன்னேன். சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார். தவெக ஆட்சி சுத்தமான அரசாக இருக்கும். ஊழல், மோசடி பேர்வழிகள் இருக்கமாட்டார்கள்.