TVK: இது தான் தவெக கொடி.. முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் விஜய்!!

 

TVK VIJAY: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அவர்கள் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் தீவீரமாக பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக கட்சி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநாடு, கட்சி கொடி அறிமுகம் என அடுத்தடுத்த கட்சி ரீதியான பணிகளை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டை நடத்துப் தவெக போவதாக தகவல்கள் வெளியானது. மேற்கொண்டு மூன்று கட்சிக் கொடிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் போருக்கு செல்லும் வீரர்கள் வெற்றி பெற்று வர வாகை மலர் சூடுவது வழக்கம்.

அதனை முன்னுதாரணமாக வைத்து தனது கட்சிக் கொடியில் வாகை மலர் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்பொழுது வரும் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அவர்கள் அறிமுகம் செய்து வைப்பதாகவும்,  இதன் பணி குறித்து தற்பொழுது சென்னை பனையூர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.இதற்கென்று 45  அடி உயர கம்பம் தயார் நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த கட்சி கொடி அறிவிப்பு விழாவில் அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி கொடி வெளியீட்டுக்கு பிறகு மாநாடு சம்மந்தமான வேலைகள் தொடங்கும் என கூறுகின்றனர்.