பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச் 

0
212
Velmurugan
Velmurugan

சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் விசிகவிலிருந்து 6 மாதத்திற்க்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல சில தினங்களிலேயே விசிகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதை இரு கட்சிகளும் சுமூகமாக கையாண்டதாக கருதினாலும் பொதுமக்கள் மத்தியில் இரு கட்சிகளுக்குமான சேதாரம் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் தான் அடுத்த சேதாரத்தை தரும் நிலைக்கு வேல்முருகன் கிளம்பியுள்ளார். பாமகவிலிருந்து வெளியேறிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த தேர்தலில் பாமக இல்லாத குறையை போக்க இவரை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. இதனைத்தொடர்ந்து பண்ருட்டி தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 உள் இடஒதுக்கீடு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். இந்த சதவீதம் குறைவு திமுக ஆட்சிக்கு வந்தால் இதைவிட அதிகமாக வாங்கி தருவதாக பிரச்சாரங்களில் பேசினார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு மற்றும் அதற்கான நீதிமன்ற தீர்ப்புகளை சரியாக கையாளாமல் 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

இது குறித்து திமுக கூட்டணியில் உள்ள வேல்முருகனிடம் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கேட்டுள்ளனர். இதனையடுத்து 10.5 இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் இவருக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாமக சார்பாக மருத்துவர் ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீடு குறித்து அனுமதி கேட்டால் உடனே தருவதாக கூறுகிறார்.

இதற்கு காரணம் வேல்முருகன் வளர்ச்சியை திமுகவின் இரண்டாம் கட்ட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட பொறுப்பாளர்கள், திமுக அமைச்சர்கள் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கூட கூட்டணியில் இல்லாத மருத்துவர் ராமதாஸுக்கு ஆதரவாகவே இருப்பதாக கூறுகின்றனர்.

இதனையடுத்தே திமுகவுக்கு எதிராக தொடர்ந்து வேல்முருகன் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொதுப்பணித்துறை குறித்த விவாதத்தில் திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கும் இவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து சமீபத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பிற்கான நிவாரணம் குறித்து பேசுகையில் தென் மாவட்டங்களுக்கும், சென்னை மக்களுக்கும், கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கும் வாரி வழங்கிய தமிழக அரசு வட தமிழக மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சட்டியிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து திமுகவை எதிர்த்து விமர்சனம் செய்து வரும் இவர் விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தன்னை கண்டு கொள்ளாத திமுகவுக்கு எதிராக பக்காவான ஒரு ஸ்கெட்ச் போட்டு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous articleமூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
Next articleஇவரையா இத்தன நாளா டீம்ல எடுக்கல?? தனது ஆட்டத்தை நிரூபித்த ஜடேஜா!!