TVK: நடிகர் விஜய் கட்சி கொடி வெளியிடுவது என ஆரம்பித்து மாநாடு என பல பணிகளை தீவிரமாக செய்து வந்தாலும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரத்தில், எப்படி சினிமாவில் அமைதியை கடைப்பிடிக்கிறாரோ அதையே தனது அரசியல் வியூகமாகவும் மாற்ற முயற்சிக்கிறாரா அது கை கொடுக்குமா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தற்பொழுது சென்னையில் நடந்து முடிந்த விமான வான்வெளி சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் குறித்து கூட பெரிதாக பேசவில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும், ஆளுநர் கலந்த நிகழ்ச்சி விடுபட்ட “திராவிட நல் திருநாடும்” குறித்தும் கூட தங்களது கருத்தை தெரிவிக்கவில்லை.
கூட்டணி குறித்து விஜய் மௌனம் காக்கிறாரா அதிலும் ஒரு சிலர் நாட்டில் நடக்கும் முக்கிய அசம்பாவிதங்களுக்கு குரல் கொடுக்காமல் நடுநிலையாக பேசுவது அல்லது முன் நடவடிக்கை என சொல்வதெல்லாம் சரிதானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தற்பொழுது அவர் முழு செயல்பாடும் மாநாடு குறித்து மட்டும் தான் உள்ளது.
இதனை தவிர்த்து தனது வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பதில் தான் இவரது பங்கு அதிகம். இப்படி அமைதி வியூகம் அமைத்தால் அனைவரும் இவரை பின்னுக்கு தள்ளி விடுவார்கள் என்றும் சினிமா திரையில் மட்டும் புரட்சி இல்லாமல் அரசியலிலும் இருக்க வேண்டுமென நெட்டிசன்கள் கூறுகின்றனர்.