விஜய்க்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம்.. கூட்டணி தலைவர் பேச்சே மாறுதே!! மத்திய அரசை பாராட்டிய திருமா!!

0
32
TVK VSK: Thiruma commented on Union Ministry providing protection to Vijay.
TVK VSK: Thiruma commented on Union Ministry providing protection to Vijay.

TVK VSK: விஜய்க்கு மத்திய அமைச்சகம் பாதுகாப்பு வழங்கியிருப்பது குறித்து திருமா கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது அரசியல் களத்தில் டாப் ட்ரெண்டிங்கில் விஜய் பற்றிய பேச்சு தான் நிலவி வருகிறது. திடீரென்று மத்திய அமைச்சகம் ஏன் இவருக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது இதன் பின்னோக்கம் என்னவாக இருக்கும் என்பதுதான் இதன் ஹாட் டாப்பிக் காக உள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா கூட ஆதரவு தான் தெரிவித்துள்ளார். விஜய் நடத்திய மாநாட்டில், பிளவு வாத அரசியல் செய்பவர்களை தனது அரசியல் எதிரி என்று கூறினார். இது பாஜக தான் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி இருக்கையில் அடுத்த அடுத்த கட்ட ஆதரவானது விஜய்க்கு அதிகரித்துக் கொண்டே போவதால் பாஜக கூட்டணி வைக்க நினைக்கிறதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணியை உடைத்து அதனை ஒழிப்போம் என விஜய் கூறியுள்ளார். அதற்கேற்றார் போல் அதற்குண்டான பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். தற்பொழுது விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்து திமுக- கூட்டனியிலிருக்கும் திருமா கருத்து தெரிவித்துள்ளார் அதில், விஜய் தனக்கேதும் பாதுகாப்பு வேண்டும் என்று கடிதம் கோரி பாதுகாப்பை பெற்றுக் கொண்டாரா?? என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் அவரது தரப்பிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் இந்த பாதுகாப்பை மத்திய அரசு செய்திருக்கும் பட்சத்தில் வரவேற்கும் தன்மையுடையதாக இது பார்க்கப்படுகிறது.

இதில் பின்னாடி அரசியல் இருப்பதாக பொதுவெளிப்படையில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எந்த விமர்சனங்கள் வைத்தாலும் ஒரு தலைவரின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

Previous articleமூன்று மாதங்களுக்குப் பின் அதிகரிக்குமா! மகளிர் உரிமைத் தொகை!!
Next articleஎடப்பாடி பதவிக்கு வந்த கெடு.. இது தான் கடைசி!! தலைமையில் உட்காரப்போகும் செங்கோட்டையன்!!