TVK: தவெக விஜய் தலித் வுடன் கூட்டணி வைப்பதன் தகவலை கட்டவுட் மூலம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
தவெக வின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி கொடுத்ததே தாமதமாகி போனது. மேற்கொண்டு அனுமதி கிடைத்ததும் மாநாட்டின் வேலைப்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக தொண்டர்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக ரேம்ப் ஒன்றும் அமைத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்டவைகள் குறித்து விஜய் இந்த மாநாட்டில் தெரிவிப்பதாக கூறியதால் மக்களிடையே எதிர்பார்ப்பானது அதிகமாகவே உள்ளது. அனைவருக்கும் பொதுவான நபராக விஜய் செயல்படுகிறார் என்ற பேச்சும் அடிபட்டு வரும் நிலையில் யாருடன் இவர் கூட்டணி வைப்பார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வி?
இவ்வாறு இருக்கையில் தாவெக -வில் இடம் பெற்றுள்ள கட் டவுட் தான் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது. அது அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்டோரின் கட்டவுட் நடுவே விஜய் இருக்கும்படி அமைத்துள்ளனர். இதன் மூலம் தலித் வுடன் தவெக கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது என தெரிகிறது.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் யூகத்தின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 சதவீத வாக்கு வங்கி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதனடிப்படையில் விடுதலை சிறுத்தை திருமாவளவன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் வாக்கு வங்கியின் சதவீதமானது மேலும் அதிகரிக்கும். இதனால் திருமா திமுக கூட்டணியை விட்டு வெளிவர அதிக வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.