Breaking News

2026 யில் ஹிட்டடிக்கும் தவெக.. சிதறும் திமுக கூட்டணி!! பக்கா பிளானை இறக்கிய விஜய்!!

Dveka will hit in 2026.. The DMK alliance will fall apart!! Vijay dropped Baka Plan!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் யாருடன் மெகா கூட்டணி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை ஒத்து வராத நிலையில் அதிமுக பாஜகவுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதேபோல பாஜக மற்றும் திமுக இருவரும் விஜய்யின் அரசியலுக்கு எதிரி.

இதனால் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. ஆனால் திமுக கூட்டணி கட்சிக்களிக்கிடையே சில அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. அதாவது மாற்றுக் கட்சிகளில் கூட்டணிகளுக்கு கொடுக்கும் தொகுதி பங்கீடு வைத்து திமுகவிலும் கேட்கிறார்களாம். அதிலும் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் வழக்கம்போல் ஆறு தொகுதி வேண்டாம் என கேட்டுள்ளது. இதற்கு அடுத்து காங்கிரஸும் தொகுதி பங்கிட்டு காரராக உள்ளார்களாம்.

ஆனால் வழக்கமான பங்கீட்டிலிருந்து திமுக நிலை மாறுவதாக தெரியவில்லை. இதனால் திருமா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறுவதாக கூறுகின்றனர். அப்படி வெளியேறும் கட்சிகளை தன் வசப்படுத்த விஜய் திட்டம் தீட்டி உள்ளாராம். அதிலும் இவர்களுடன் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளதாம். இந்த கூட்டணி மட்டும் இணையும் பட்சத்தில் திமுக வை எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என கூறுகின்றனர். அதிலும் முதலாண்டு விஜய் முதல்வராகவும் இவர் கூட்டணியில் இருப்பவர்கள் துணை முதல்வராகவும் இருப்பதாக பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாம்.

அடுத்தடுத்த வருடம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வராக ஆட்சி செய்வார்களாம். தேர்தல் நெருங்கும் பட்சத்தில் தான் இது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மையாக மாறும் என்பதை பார்க்க முடியும்.