அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்!

0
136

இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, டுவிட்டர் நிறுவனம் பகிரங்கமாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனம் தேர்தலில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளையோ, தேர்தல் சம்பந்தமான குளறுபடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையோ, தனது சேவைகளை பயன்படுத்தி இவ்வாறான செயல்களை செய்யக்கூடாது என்ற கொள்கைகளை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்த கருத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், “தற்போது நடந்து வரும் அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சதீ செய்து வெற்றியை தட்டிப் பறிப்பதற்கு முயற்சி செய்க்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இக்கருத்து அங்கு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதிவு இந்நிறுவனத்தின் கொள்கைக்கு எதிராக இருக்கிறது. அதனால், அந்நிறுவனம் இந்த பதிவை மூடி மறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறான பதிவை பதிவிட கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Previous articleஅதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!
Next articleஅவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!