இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Photo of author

By Anand

இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்: ட்விட்டரில் வருத்தெடுத்த நெட்டிசன்கள்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் அடித்த அதிரடி சதத்தால் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான T 20 போட்டி முடிவடைந்ததையடுத்து நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கிய இந்தியா ரிஷப் பந்த் (71), ஷ்ரேயாஸ் அய்யர் (70), கேதர் ஜாதவ் (40) ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Virat Kohli

இதன் பிறகு 288 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் சுனில் அம்ப்ரிஸ் வெறும் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியானது மிகவும் அபாரமான ஆட்டத்தை ஆடினார்கள். ஷாய் ஹோப் ஒரு பக்கம் நின்று நிதானமாக ஆட மறுபக்கம் ஹெட்மையர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் தங்களுடைய அரை சதத்தை அடித்தனர். இந்நிலையில் 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் அடுத்து 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதம் இதுவாகும்.

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் ஷாய் ஹோப் தங்களது அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து அவரும் தன்னுடைய 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இறுதியாக ஆடிய ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதற்கு முன்பு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனையடுத்து எதனால் இந்திய அணி தோற்றது என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்: