வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

0
137
Modi
Modi

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமாராக ஆட்சி செய்து வருகிறார்.இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரம் இந்திய அளவில் ட்ரெண்டிங்  ஆகி வருகிறது. ட்விட்டரில் பல இளைஞர்கள் தங்களுக்கு வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக “மோடி ரோஜ்கார் டூ” என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த போது 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என கூறியதாகவும், தற்போது வெற்று உரைகள் மட்டுமே பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும் ட்விட்டரில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலரும் இணைந்து அரசின் மீது உள்ள எதிர்ப்பை இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!
Next articleதமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு