இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்!
அனைவருடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக இருபது சிலிண்டர்.அவ்வாறான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது.ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து வருகின்றது.முன்னதாக சிலிண்டர் வாங்க மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்து வருவதில் புத்தாண்டு அன்று சிலிண்டரின் விலையை உயர்த்தி அறிவித்தது.கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டரின் விலையை அதிகரிக்காமல் வணிக சிலிண்டரின் விலையை ரூ 25 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சிலிண்டரின் விலை அதிகரிக்க கூடும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனர்களுக்கு இந்த ஆண்டு ஹோலிப்பண்டிகையில் இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.இந்த திட்டம் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகின்றது.