மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!

Photo of author

By Savitha

மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!

Savitha

கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் அதிரடியாக கைது;கடைக்கு சீல் வைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள ஒரு மருந்தகத்தில் வட்டார மருத்துவர் பாலதண்டபாணி தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அந்த மருந்தகத்தை நடத்தி வந்த விஜய் (27) என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமலே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் எடுத்தவாய்நத்தத்தில் மருந்தகம் நடத்தி வந்த ரகுமான் (52) என்பவரும் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தெரிந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரகுமானின் மருந்தகத்துக்கு சுகாதார துறையினர் சீல் வைத்தனர்.