கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்!

0
174
kamal kh233 movie
kamal kh233 movie

கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்த முடித்துள்ளார். இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு கமல் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்புகள் அதிக அளவு காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்த கமல்ஹாசன் கல்கி 2898,AD போன்ற திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களில் படப்பிடிப்பை முடித்த பிறகு அவர் KH223 என்ற படத்தை அவரது சொந்த தயாரிப்பில் தயாரிக்கயுள்ளார்.

இவரது இந்த KH223 திரைப்படமானது எச்.வினோத்தின் இயக்கத்தில் துவங்கவிருக்கிறது. இந்த திரைப்படத்தில் கமல் அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் கெட்டப் சேஞ்சிருக்காகவே இங்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர் கெட் அப் சேஞ்சில் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த KH223 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ராணுவ வீரராக நடிக்க இருக்கிறார் என்பதும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது வரும் நவம்பர் மாதம் (முதல் வாரத்தில்) துவங்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த KH223 திரைப்படத்தில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய, விஜய் சேதுபதி அவர்கள் மீண்டும் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஒரு பக்கம் விஜய் சேதுபதி என்றும் மற்றொரு பக்கம் சிலம்பரசன் எனவும் பேச்சு வார்த்தைகள் நிலவி வந்தது. நடிகர் சிம்புவை படத்தில் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் அவரது நீண்ட தலைமுடியை ஆகும். சிம்புவின் இந்த கெட்டப்பை இப்படத்தில் பயன்படுத்திக் கொண்டால் இப்படம் நன்றாக அமையும் எனவும் பலர் கூறி வந்தனர்.

விஜய் சேதுபதி? அல்லது சிம்புவா? என்ற குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் இருவருமே இப்படத்தில் கமிட் ஆகியுள்ளனர் என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது

Previous articleவிடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்!
Next articleகடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?