ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு சூப்பரான ஆட்டங்கள்!! இன்று பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!!

Photo of author

By Savitha

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு சூப்பரான ஆட்டங்கள்!! இன்று பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!!

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த நான்கு அணிகள் விளையாடுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

லக்னோவில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணியில் ருத்ராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, சிவம் துபே மூவரின் மேல் ரசிகர்களின் கவனம் உள்ளது. அது போல பந்து வீச்சில் அதிக ரன்கள் கொடுத்தாலும் விக்கெட் எடுக்கும் துஷார் தேஸ் பாண்டே, சிறப்பாக பந்துவீசும் ஜூனியர் மலிங்கா மதீஷா பதிரானா, சுழலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மஹீஸ் தீக்ஷனா உள்ளனர்.

அது போல லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் பேட்டிங்கில் கே எல் ராகுல் இருக்கின்றார். இருந்தாலும் அவர் இன்று காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வந்துள்ளது. கே எல் ராகுலை தவிற பேட்டிங்கில் கேய்ல் மேயர்ஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி உள்ளனர். சுழலில் ரவி பிஷினோய் மற்றும் மூத்த வீரர் அமித் மிஸ்ரா இருவரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர். மேலும் ஆல்ரவுன்டர்களில் க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னஸ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்த இரு அணிகளும் மோதும் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது. இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷிகர் தவன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றது.