ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!
கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெளியாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்து உருவாக உள்ள கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார். இந்த படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இப்போது தெலுங்கு நடிகரான சுனில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா மந்தனாவும், அனு இம்மானுவேலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

