இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

Photo of author

By Sakthi

இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

Sakthi

Two horses ran on the road with blood injuries! Viral video on the Internet!
இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ ஒன்றில் இரண்டு குதிரைகள் இரத்தம் சொட்ட ஓடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதை பார்த்த பொதுமக்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சாலையில் இரத்தம் சொட்ட சொட்ட குதிரைகள் ஓடிய இந்த சம்பவம் மத்திய லண்டனில் நடந்துள்ளது. மத்திய லண்டனில் வரலாற்று நிதி மையத்திற்கும் வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் உள்ளது. அந்த ஆல்ட்விச் அருகே உள்ள தெரு வழியாக இரத்தம் சொட்ட சொட்ட கருப்புற நிற குதிரை ஒன்றும் வெள்ளை நிற குதிரை ஒன்றும் ஓடியுள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சாலையில் குதிரைகள் ஓடுவது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரத்தம் சொட்ட சொட்ட ஓடிய இரண்டு குதிரைகளையும் பத்திரமாக மீட்டனர்.
https://twitter.com/PolitlcsUK/status/1783062469071495302?s=19
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்கையில், இந்த குதிரைகள் போலிஸ் படையை சேர்ந்தது. காலையில் இந்த குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது இந்த குதிரைகள் இரண்டும் தப்பித்து வந்துள்ளது.
குதிரைகள் இரண்டும் தப்பித்து வரும்பொழுது சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி இருக்கலாம். அப்பொழுது குதிரைகளுக்கு இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலானது.
இது குறித்து லண்டன் காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இது போலவே சில குதிரைகள் பயிற்சியின் பொழுது தப்பித்து சென்றுள்ளது. அந்த குதிரைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று லண்டன் காவல் துறையினரின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.