ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!!

0
173
RCB or CSK??? Annamalai answered skillfully….!!
RCB or CSK??? Annamalai answered skillfully….!!

ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், கர்நாடகாவில் வரும் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பிற மாநிலங்களுக்கு சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பெங்களூரில் சிட்டிங் எம்பியாகவும், பாஜக அணியின் தேசிய இளைஞர் அணி தலைவராகவும் உள்ள தேஜஸ்வி சூர்யா மீண்டும் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே இவரை ஆதரித்து அண்ணாமலை பெங்ளூரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர்கள் இருவரிடமும் நிரூபர் ஒருவர் ஆர்சிபி அல்லது சிஎஸ்கே? என கேள்வி எழுப்பினார். அதற்கு தேஜஸ்வி சூர்யா 100% ஆர்சிபி பிரதர் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அவரை தொடர்ந்து அண்ணாமலையிடம் நீங்கள் பெங்களூரில் டிசிபி-யாக பணியாற்றி உள்ளீர்கள் எனவே உங்களுக்கு ஆர்சிபி-யா அல்லது சிஎஸ்கே-வா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இது தோனிக்கு கடைசி டோர்னமெண்ட். எனவே சிஎஸ்கே-வை வெற்றி பெற அனுமதிக்க வேண்டும்” என மிகவும் சாமர்த்தியமாக பதிலளித்து தப்பியுள்ளார். இப்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது பாஜக மாநில தலைவராக பொறுப்பு நிர்வகித்து வரும் அண்ணாமலை முன்னதாக கர்நாடகாவில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து பெங்களூரில் கூட துணை போலீஸ் கமிஷ்னராக பணியாற்றினார். அந்த சமயத்தில் தான் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.