மின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!

0
224

மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததுடன் 3 பேர் வந்ததால் சைமனின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் கூறியதையடுத்து கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு தரப்பட்டது.

இதுகுறித்து கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளிடம் அளித்த புகாரையடுத்து, அவர் விசாரணை நடத்தி வருகிறார் .

Previous articleஅமெரிக்காவில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான்
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 971 பேர் பலி: 78512 பேருக்கு கொரோனா தொற்று!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here