இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி!

0
295
Two motorcycles collide head-on in an accident! Thai Sai Sacrifice!
Two motorcycles collide head-on in an accident! Thai Sai Sacrifice!

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி அன்னபூரணி.இவர்களுடைய மகன் மைத்தீஷ்.இவர்கள் குடுபத்துடன் நேற்று அமாவாசையையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் மேச்சேரி குள்ளமடையானூர் அருகே சென்று கொண்டிருந்தனர்  போது மேட்டூர் சுப்பராய நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அதே பகுதியில் மோட்டர்சைக்கிளில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் அன்னபூரணி ,மற்றும் அவர்களுடைய மகன் மைத்தீஸ் ஆகியோர் கீழே விழுந்தனர்.அப்போது அவர்களுக்கு பின்னால் வந்தார் கார் தாய் மற்றும் மகன் மீது மோதியது.அந்த விபத்தில் தாய் ,மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் மூர்த்தி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

அதனையடுத்து ராஜேந்திரனுக்கு  பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போளிசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர் அடுத்தது என்ன?
Next articleநிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!