ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்த ஐ.டி. பெண் ஊழியர் உட்பட இருவர் எடுத்த விபரீத முடிவு!
ஊரடங்கு காரணமாக வருமானமில்லாமல், தவித்து வந்த சென்னை ஆவடியை அடுத்த,தேவராஜ்புரம் பட்டாபிராம்,பகுதிகளை சேர்ந்த இளம்பெண் காஞ்சனா மற்றும் பால்ராஜ் என்பவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கதக்க பெண்டர் பால்ராஜ் என்பவர்,ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.போதிய வருமானம் இல்லாததால் பால்ராஜ் மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்த பால்ராஜ் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை தேவராஜ்புரத்தை சேர்ந்த காஞ்சனா என்பவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.ஆனால் கொரானா காரணமாக,ஆறு மாதங்களாக வேலையின்றி,வீட்டில் இருந்து வந்த காஞ்சனா,இஎம்ஐ உள்ளிட்ட காரணங்களால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்திருந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காஞ்சனா கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலையின்மையின் காரணமாக இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.