விஷவாயு தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு..!

Photo of author

By Parthipan K

ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது சஞ்சய், முருகேசன் ஆகிய இரண்டு பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட ஆறுமுகம், தவமணி, சிரஞ்சீவி ஆகிய மூவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.