TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர்.
முதலாவதாக நடைபெற்ற தமிழ் தேர்வின் போது உங்களுக்கு தற்போது வரை ஹால் டிக்கெட் வரவில்லை எனக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். இப்படி அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோரிடமும், உங்கள் மகன் தேர்வு எழுதினால் கூட பாசாக வாய்ப்பில்லை இதற்கு தேர்வு எழுதாமலே இருந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதை கேட்டு கொந்தளித்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இது ரீதியாக தலையிட்டு ஆங்கிலத் தேர்வுக்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் இவர்களால் தமிழ் தேர்வு எழுத முடியாமல் போனது. இதற்கு முக்கிய காரணம் அந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தேர்ச்சி விகிதம் குறைந்த விடக்கூடாது என்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கூட, தற்பொழுது நாங்கள் திருப்பி அனுப்பிய மாணவர்கள் ஒரு மாதம் கூட பள்ளிக்கு வரவில்லை அப்படி இருந்தும் அவர்களுக்கு நாங்கள் ஹால் டிக்கெட் கொடுத்து தேர்வு எழுத அனுப்பி வைத்தோம்.
ஆனால் அவர்கள் வந்தார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை எனக்கு கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதை அப்பட்டமான பொய் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கல் , தலைமையாசிரியர் என அனைவர் மீதும் பள்ளிக்கல்வித்துறை எம் மாதிரியான நடவடிக்கை எடுக்கும் அரசு பள்ளிகளிலேயே இப்படி ஒரு சாரா நடந்து கொள்ளலாமா என்ற கேள்வியையும் எழுப்பு வருகின்றனர்.