டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

0
202

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த இடத்தில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சராய் கலே கான் எனும் அந்த இடத்தில் இரவு பத்து மணி அளவில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களிருவரும் டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 ஆட்டோமேட்டிக் பிஸ்டல், தோட்டாக்கள் மற்றும் சில துப்பாக்கிகள் என பலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையின்போது இந்த இரண்டு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 20 வயது பூர்த்தி அடைந்த முகமது அஸ்ரப், அப்துல் லதீப் ஆவர். அதுமட்டுமின்றி போலீசார் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஉன் மேல லவ் எல்லாம் இல்ல என்று சொன்ன பாலா! Why this kolaveri Da என்று பாடிய சிவானி!
Next articleமன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here