மது பாட்டில்கள் கொடுக்கல் வாங்கலில் தகராறு; இருவருக்கு அரிவாள் வெட்டு!!

0
158

திருவள்ளூர் அருகே மது பாட்டில்கள் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (வயது 38), சுரேஷ் (வயது 36). இருவரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவர்களை வழிமறைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கூச்சல் போட்டதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்நது தப்பினர்.

இவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சேகரும், சுரேஷும் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர் மேற்கொண்டனர். அந்த அந்த விசாரணையில், கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஞானசேகர் (வயது 21), கிருஷ்ணா (வயது 23), கிரண் (வயது 24) ஆகிய 3 பேர் தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்தது.

பின்னர், அவர்கள் மூவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதுபாட்டில்கள் கொடுக்கல் வாங்கலின் போது தகராறு ஏற்பட்டது. அதன் முன்விரோதம் காரணமாக அவர்களை அரிவாளால் வெட்டினர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர், அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleCCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Next articleஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!