கிருமி நாசினி தெளிக்க இருசக்கர வாகன சேவை அறிமுகம்

Photo of author

By Parthipan K

நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அதனை சமாளிக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தற்போது லாரி உள்ளிட்ட நான்கு சக்கரம் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் நிலையில், குறுகலான சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு ஏதுவாக இருசக்கர வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதற்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்க 1,36,25,000 ரூபாய் மதிப்பில் 25 இருக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி துவங்கி வைத்தார்.

முதற்கட்டமாக சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவும் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவை பயன்படுத்தப்படவிருக்கிறது.