இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் !!

0
114

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள்

தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக இணையதளத்தின் வாயிலாக நிறைய இளம் தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருகின்றனர். இணையதளத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாகி இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக ஆன இரு இந்தியவர்களை பற்றி இங்கு பார்க்கலாம் :

ஸ்ரீ லட்சுமி சுரேஷ்:

இடிசைன் மற்றும் டினிலோகோ (eDesign and Tiny Logo) நிறுவத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களை தொடங்கினார். ஸ்ரீலக்ஷ்மி உலகின் மிக இளைய வயதுடைய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணையத்தள வடிவமைப்பாளர் ஆவார். பள்ளிப் படிக்கும் சிறுவயதில் தனது முதல் இணைய தளத்தை உருவாக்கியவர். பல்வேறு திறமைகளைக் கொண்ட ஸ்ரீலட்சுமி மிகக் குறுகிய காலத்திலேயே கணினிகளை இயக்குவது புதிய, புதிய மென்பொருட்களை கையாள்வது என இணைய உலகில் தனது திறமையை பல மடங்கு வளர்த்து கொண்டார்.

படிக்கும் போதே தமது பள்ளியின் இணையதளத்தை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் அவருக்கு இளைய வலை வடிவமைப்பாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவராவார். அவரது “eDesign மற்றும் TinyLogo” என்ற நிறுவனத்தின் மூலம், பல புகழ்பெற்ற நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்.

பல பெண்களுக்கும், இளைஞர்களும் முன்னுதாரணமாக திகழும் ஸ்ரீ லட்சுமி அவர்கள் ,தொழில் முனைவோருக்கு குறிப்பாக இணையதளத்தை பயன்படுத்தி தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரும் வழிகாட்டியாக உள்ளார்.

ஃபர்ஹாத் அவிட்வாலா :

தற்போது 29 வயது நிரம்பிய அவர், கடந்த 2009ஆம் ஆண்டு (Rockstah Media and CYBERNETIC DIGITAL) நிறுவனத்தைத் தொடங்கியவர். இவரது நிறுவனம் வெப் டெவலப்மெண்ட் ஊடக நிறுவனமாகும். உலகின் இளம் தொழில்முனைவோர் களில் ஒருவரான ஃபர்ஹாத் நிறுவனர் தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் முன்னணியில் உள்ளவர். அவர் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனது பெற்றோரிடமிருந்து 10 டாலர் கடன் வாங்கி தனது முதல் டொமைன் பெயரை வாங்கினார். தற்போது ‘நாட்டின் புத்திசாலித்தனமான ‘பார்க்க மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் தொழில்முனைவோர்’ பட்டிய லில் 4ஆவது இடத்தில் உள்ள இவர், பல்வேறு பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும், ஐஐடி காரக்பூரின் தொழில்முனைவோர் ஆண்டுக்கான உச்சி மாநாட்டில் இளம் விரிவுரையாளருமாக இருக்கிறார்.

இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் சிறுவயதிலேயே இணையதளங்கள், மென்பொருட்கள், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதன் மூலம் தங்களது பெற்றோர்களை சார்ந்து இருக்காமல், தங்களின் வருமான்கி கொண்டு சிறு வயதிலேயே கோடீஸ்வரர்களாக உருவாக்கி வருவது, நம் நாட்டிற்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

 

 

 

 

 

 

 

Previous articleஅண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்
Next articleமலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுகிறீர்களா!!! இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்க!!! மலச்சிக்கல் மாயமாகி விடும்!!!