உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
208
Uber Driver Case Judgement in England
Uber Driver Case Judgement in England

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.

Uber Driver Case Judgement in England
Uber Driver Case Judgement in England

இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது.  வழக்கு விசாரணையின் போது, ஓட்டுநர்கள் செல்ஃப் காண்ட்ராக்ட் எனப்படும் தன் விருப்ப ஒப்பந்த முறையில் பணியாற்றுவதாக உபர் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதை ஏற்க மறுத்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இங்கிலாந்து சட்டப்படி அவர்கள் அனைவரும் நிறுவனத்தின் தொழிலாளர்களே எனக் கூறி மேல் முறையீட்டு வழக்கை ரத்து செய்தது. இரண்டு ஓட்டுநர்களுக்கும், உபர் நிறுவனத்திற்கும் 5 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டத்தின் விளைவாக, தற்போது உபர் நிறுவனத்தில் பணியாற்றும் 65 ஆயிரம் ஓட்டுநர்கள் பயனடையவுள்ளனர்.

 

Previous articleஉடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?        
Next articleகுளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்