கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் அராஜக நடவடிக்கையை கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மேலும் இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்தப் போராட்டம் வெறும் போஸ்டர் ஓட்டியதற்காக மட்டுமல்ல. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கிறார். தேர்தலில் மக்கள் அவரை துரத்தி துரத்தி அடிக்க போகின்றனர்” என தெரிவித்தார்.
மேலும் போஸ்டர்களில் பேரைப் போட்டு அடிக்க கூட தைரியம் இல்லாதவர் வேலுமணி என கடுமையாக சாடினார்.
இதனைஅடுத்து பேசிய உதயநிதி, இதைவிட கேவலமாக சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர்கள் அடிக்க தெரியும் என தெரிவித்தார்.
மேலும் “அடுத்த முறை போஸ்டர்கள் ஒட்டினால் அதன்மீது வேறு போஸ்டர் ஒட்டுவோம். அதைக் கிழிக்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார் உதயநிதி.
இதனிடையே தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே போராட்டத்திற்கு அனுமதியை மறுத்து பேனரை அகற்றியது காவல்துறை. இதனால் திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் அடிமை ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார் உதயநிதி.