எடப்பாடி அரசை அசிங்கப்படுத்த உதயநிதி செய்த பித்தலாட்டம் அம்பலம்:? வருத்தெடுக்கும் மக்கள்

Photo of author

By CineDesk

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் கொரோனாத் தொற்றால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை பட்டியலைபதிவிட்டிருந்தார். இதில் இந்தியாவில் மொத்தம் 18 மாவட்டங்களில் 175 மருத்துவர்கள் பலியானதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 43 மருத்துவர்கள் பலியானதாக உதயநிதி வெளியிட்ட அந்த தகவல் பட்டியலில் இருந்தது.

இந்த தகவல் பட்டியலை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தொற்று பாதிப்பால் இறக்கும் மக்களின் எண்ணிக்கையை தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு என்றும் எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்! என்றும்,மருத்துவர்களின் இறப்புக்குச் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இவர் வெளியிட்டிருந்த இந்த ட்விட்டர் பதிவுக்கு மக்கள் பலரும்,மருத்துவத்துறையை ஒட்டுமொத்தமாக கூறு போட்டு விற்றுவிட்டது.இந்த அரசு. மருத்துவர்களையும் துப்புரவு பணியாளர்களையும் காக்கத் தவறிய கேடுகெட்ட அடிமை அரசு இந்த அரசு.என்று எடப்பாடி அரசின் மீது குற்றம் சாட்டி உதயநிதி ஸ்டாலின் டுவிட்டுக்கு கமெண்ட் செய்து கொந்தளித்து வந்தனர் பொதுமக்கள்.


ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த டுவிட்டர் செய்தி அதிகாரப்பூர்வமற்றது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் மரணத்தில் பொய் சொல்லி மக்களின் உயிரோடு விளையாடுவது கிரிமினல் குற்றத்திற்கு சேர்ந்தது என்றும் உண்மைத் தன்மையை அறியாமல் போலி டேட்டா வெளியிட்டு மருத்துவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி பணி இடையூறு செய்வது கொலைபாதகம் என பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி வெளியிட்ட இந்த
ட்விட்டர் பதிவைக் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், கொரோனாவால் 43 மருத்துவர்கள் பலியானதாக வெளியான தகவல் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றது. தமிழ்நாட்டில் அப்படி யாரும் இறக்கவில்லை. இந்த செய்தியை நாங்கள் அடியோடு மறுக்கிறோம்”எனத் தெரிவித்துள்ளனர்.எடப்பாடி அரசை அசிங்கப்படுத்துவதற்காக உண்மை தன்மையை அறியாமல் உதயநிதி வெளியிட்ட இந்த ட்விட்டுக்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.