திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ,அதிமுக, தேமுதிக ,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள் சுமார் 7 ஆயிரத்து 215 நபர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்கள்.

சமீப காலமாக இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக வேலைக் கையில் வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பது, இந்துக்களின் நண்பன் என்று தெரிவிப்பது, போன்ற பிரச்சினைகளை திமுகவின் தலைமை செய்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திமுகவிற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி வரும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படியே திமுக தலைமை இந்துக்களை ஆதரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், திமுக தெரிவித்த இந்த இந்துக்களுக்கு ஆதரவான கருத்தை நம்பி இவர்களை போன்ற ஒரு சிலர் மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால் இதனை முன்னுதாரணமாக கொண்டு தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் தலைமை என்ன தான் கடவுள் மறுப்பு கொள்கை உள்ள கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அது அந்த கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டு வெளிவராமல் இருந்தாலும் கூட வெளிவந்ததை போல ஒரு தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் வெற்றியை ருசிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதனை மக்கள் யாரும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே அந்தக் கட்சியின் வெற்றி சூட்சமம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் திமுகவின் இந்த சூட்சமும் வெகு காலத்திற்கு நீடிக்கப் போவதில்லை எனவும், தற்போது இளைஞர்கள் அனைவரும் விழிப்புணர்வாக இருந்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் திமுகவின் இந்த பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏதோ ஒரு சிலர் ஏமாந்து போய் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் திமுகவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசும்போது எந்த ஒரு விஷயத்தையும் சரிவர சொல்வது கிடையாது, அவர் பேசும் விதமே சரியில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் மேடைகளில் பேசும்போது அநேக இடங்களில் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்கள் .ஆகவே திமுகவின் இந்த யுக்தி எத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் பலனளிக்கும் என்று தெரியாது என்பது போன்ற கருத்துக்கள் பரவலாக உலாவிக் கொண்டிருக்கிறது.