2026 சட்டமன்ற வெற்றிக் கனியை பிடிக்க உதயநிதியின் மாபெரும் ஆன்மீக யாகம்.. ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கைது நடவடிக்கையில் சொல்வதென்ன!!

0
147
Udayanidhi's great spiritual sacrifice to capture the fruit of 2026 assembly victory.. What Sri Rangam Rangarajan says in the arrest process!!
Udayanidhi's great spiritual sacrifice to capture the fruit of 2026 assembly victory.. What Sri Rangam Rangarajan says in the arrest process!!

DMK : 2026 சட்டமனற்ற தேர்தலில் வெற்றிபெற உதயநிதி யாகம் செய்ததாக ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கூறியததற்கு அவர் மீது தற்பொழுது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் .

திமுக தனது வாரிசு அரசியலை தொடர்வதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே உதயநிதியை முன் நிறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் முடிவானது இன்று துணை முதல்வர் பொறுப்பில் அவரது மகன் அமர்ந்துள்ளார். வாரிசு அரசியலே செய்ய மாட்டோம் என கூறிய ஸ்டாலின் அவரது முதல்வர் பதவிக்கு அவரது மகனை ஆயத்தப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் உதயநிதி மேடையில் பேசும் பொழுது  டெங்கு மலேரியாவை போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டமென பேசினார். இவ்வாறு அவர் பேசியது பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. பல தரப்பிலிருந்தும்  கண்டனம் எழுந்தது. இவ்வாறு இருக்கையில் உதயநிதி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்பதற்காக 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இவ்வாறு அவர் வெளியிட்டதும் அது மிகவும் வைரலானது. குறிப்பாக சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் எப்படி பரிகார பூஜை செய்ய முடியும் என்ற கேள்விகளை முன் வைத்தனர். அதுமட்டுமின்றி கடவுளை வணங்குவதில்லை என கூறியவர் பல கோவில்களுக்கு பிரதேசித்தும் வருகிறார். இதெல்லாம் உண்மை என அறியும் முன்னரே அவர் மீது வழக்கு தொடுத்து தற்பொழுது விசாரணையின் பெயரில் கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்யும் பொழுது, இது சென்னை போலீஸா இல்லை ஸ்ரீ ரங்கம் போலீஸா எனக்கு தெரியவில்லை, வீட்டில் வந்து கைது செய்துள்ளார்கள் என கூறியுள்ளார். தேர்தலின் போது திமுக வுக்கு எதிராக பேசிய கிளி ஜோஷியரையே கைது செய்த பொழுது இவரை மட்டும் எப்படி விட்டு வைக்க முடியும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.  

Previous articleஇதுதான் வாய குடுத்து வாங்கி கட்டிக்கிறது!! அவசரப்பட்டு வார்த்தை விட்ட இந்திய வீரர்!!!
Next article“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!