அமைச்சராக உதயநிதியின் அடுத்த அதிரடி! மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி!
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வாக வெற்றிவாகை சூடிய உதயநிதி, அமைச்சராக ஏன் துணை முதல்வராக கூட பொறுப்பேற்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூறி வந்தனர்.
அதுமட்டுமின்றி அவரது செயல்பாட்டிற்கு உயர் பதவி வழங்குபடி முதல்வரிடம் ஒருவர் பின் ஒருவராக கோரிக்கை வைத்து வந்தனர்.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை அமைச்சராக நியமனம் செய்துள்ளார்.
இதுவே திமுக ஆட்சிக்கு வந்து தற்பொழுது இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம்ஏற்பட்டுள்ளது.உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முதலாவதாக விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியம் மூன்றாயிரம் என்பதிலிருந்து இருந்து 6000 ஆக உயர்த்தி கையெழுத்திட்டார்.
அதற்கு அடுத்தப்படியாக 2023-2024 ஆம் ஆண்டு முதல்வர் கோப்பை கொண்டு கபடி போட்டி நடத்த கையெழுத்திட்டார்.மூன்றாவதாக சர்வதேச துப்பாக்கி சூட்டில் மூன்றாவது பெண்கள் தனிப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற செல்வி நிவேதா என்பவருக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் கையெழுத்திட்டார்.
தற்பொழுது வரை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தேர்வுகள் முதல் அனைத்திலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வரும் நிலையில், விளையாட்டு துறையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து கோரிக்கையை முதல்வரிடம் விரைவில் எடுத்துக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் விளையாட்டு துறை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது ஊந்துகோளாக இருக்கும்.