தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Photo of author

By Rupa

தேமுதிக தலைவரை உதயநிதி திடீர் சந்திப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடை பெற்றது.தேர்த்தலின் முடிவுகளை எண்ணி மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் தேர்தலின் முடிவுகளானது மே 2-ம் தேதி வெளியானது.அதில் திமுக 159 இடங்களில் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது.

நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.அவர் பதவியேற்கும் முன்னே பல சம்பவங்கள் பரபரப்பாக நடந்த வண்ணமாக உள்ளது.அந்தவகையில் இன்று சென்னையிலுள்ள அம்மா உணவகத்தை திமுக தொண்டர்கள் உருட்டு கட்டையால் அடித்து உடைத்தனர்.அம்மாவின் புகைப்படங்களை கிழித்து விட்டு திமுக தலைவர் ஸ்டாலினின்  புகைப்படத்தை வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவரவே அவர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

அதற்கடுத்து தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.அவர் உடல்நிலையை விசாரிக்க திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார்.அவரை வரவேற்கும் விதமாக எல்.கே.சுதீஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.இவர்கள் சந்திப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா என ரசியல் சுற்று வற்றாநகல் பேசி வருகின்றனர்.