தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை களுக்கு பொருளாதார ரீதியாக தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
அதேபோல சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் தங்களுடைய தேவைக்காக சேர்த்து வைத்திருந்த சிறிய அளவிலான தொகைகளையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள். அந்த விதத்தில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த யோகிதா என்ற 9 வயது சிறுமி நோய்த்தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் தினமான நேற்றைய தினம் அந்த சிறுமிக்கு சைக்கிளை பரிசாக அளித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.