பொங்கல் பரிசு பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

0
50

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது.. அந்த தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். கொரோனா காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களின் நிலையை மனதில் வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் இதற்கான அரசாணையும் வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அரசாணையில், ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை தமிழர்களின் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசு கொடுப்பதற்கான செயல்முறைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜனவரி மாதம் 12ஆம் தேதிக்குள் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு கைரேகையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் குறைபாடு இருப்பதாகவும், கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார்.