விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!

0
201

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!

ஸ்டாலின் வாரிசு அரசியலை இருக்காது என்று கூறிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் உதயநிதி களமிறங்கி வேலைகளை செய்து வந்தார்.

அந்த வகையில் இவரை இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏவாக பதவியேற்றார்.

திமுக ஆட்சி அமைந்து ஒன்றை ஆண்டுகள் ஆன நிலையில் இவருடன் பின்பு கட்சியில் இணைந்தவர்கள் கூட அமைச்சராக இருக்கும் பொழுது உதயநிதி ஏன் அமைச்சராக கூடாது என இவரது உயிருக்கு உயிரான நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

இவர் பற்றி வைத்த ஒரு பொருள் தான் தீயாக மாறி அடுத்தடுத்து அறநிலை துறை அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர் என அனைவரும் உதயநிதி கட்டாயம் அமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடந்து முடிந்த உதயநிதி பிறந்தநாள் அன்று ஒரு நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து கூட உதயநிதி இடம் பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி எழுப்பிய பொழுது நான் அமைச்சராகுவது எனது அப்பா கையில் தான் உள்ளது என நாசுக்காக பதில் சொல்லி இடத்தை காலி செய்தார்.

திமுக ஆட்சி அமைந்த உடனே ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் டிசம்பர் 14ஆம் தேதி புதிய மாற்றத்தை கொண்டு வருவார் என்று கூறி வருகின்றனர்.

அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி அமைச்சராக மாற்றப்படலாம்.

அந்த வகையில் இவருக்கு விளையாட்டு துறை அல்லது ஏதேனும் வேறு துறைகளில் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ப்ரொடியூசர் வேலையில் மும்முரமாக இருக்கும் உதயநிதியை முழு நேர கட்சி நிர்வாகியாக மாற்ற அவரது அப்பா திட்டம் போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Previous articleஎந்த ராசிக்காரர்கள் எந்த காலத்தில் திருமணம் செய்யவேண்டும்? பார்க்கலாம் வாங்க !
Next articleமேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?