உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

0
252

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக அரசியல் பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் தான் நடித்து வந்த ’சைக்கோ’ திரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

’சைக்கோ’ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் நித்யா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தன்விர்மிர் ஒளிப்பதிவும், அருண்குமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை டப்புள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சைக்கோ படம் குறித்து தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் கூறியபோது, ‘இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது. இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான இயக்கம், வெகு திறமையான நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் படத்தின்பால் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.

Previous articleஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி ஆர் பாலு விவாதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்: கலாய்க்கும் பாமக தலைவர் ஜி.கே மணி
Next articleகுடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது – பிரகாஷ் ஜாவடேகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here