பொன்முடி பதவிக்கு ஆப்பு வைத்ததே உதயநிதி தான்.. அடுத்து உங்களுக்கும் தான்!! துரைக்கு போன எச்சரிக்கை!!

0
7
udhayanidhi-is-the-one-who-got-ponmudis-post-warning-to-durai
udhayanidhi-is-the-one-who-got-ponmudis-post-warning-to-durai

DMK: திமுகவில் உட்கட்சி பூசலானது அவரின் மகனாலேயே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தற்போது வந்த தன் மகனுக்காக துணை முதல்வர் பதவியை தூக்கிக் கொடுக்கலாமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்த ஒன்று?? இது ரீதியாக கட்சியின் சீனியர் சிட்டிசன் பலரும் அதிருப்தியில் இருந்தனர். ஒரு சில மேடைகளில் இது குறித்து துரைமுருகன் வாய் திறந்து மறைமுகமாக பேசியிருப்பார்.

அதற்கேற்றார் போல் ஸ்டாலினும் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என பதிலடியம் கொடுத்ததுண்டு. ஆனால் கட்சியில் உள்ள அனைத்து சீனியர் சிட்டிசனுக்கும் பட்டென்று நெற்றியில் அடிக்கும்படி அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு தண்டனை கிடைத்துள்ளது. மற்றவர்கள் இப்படி பேசினாலும் அவர்களுக்கும் அதே கதி தான் என்பதை திமுக உணர்த்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் ஸ்டாலின் கிடையாது உதயநிதி தான் இருக்கிறார் என கூறுகின்றனர்.

தற்போதைய துணை முதல்வர் பதவியில் வகிக்கும் உதயநிதிக்கு கட்சியின் மரியாதை என்பது மிகவும் முக்கியம். அதற்கு களங்கம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். தொடர்ந்து திமுக என்றாலே சர்ச்சை பேச்சு என அக்மார்க் ஸ்டாம்ப் குத்திவிட்டனர். இதனை மாற்றும் வகையிலும் மற்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடும் நோக்கத்திலும் இவரின் பதவியானது பறிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தினாலேயே அமைச்சர் துரைமுருகன் தானாகவே வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஊனமுற்றோரை அவதூறாக பேசியுள்ளார். அப்படி பேசிவிட்டு தானாகவே வந்து தற்போது மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிமுக – பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கிறது?!. இதுதான் காரணமா?!…
Next articleஇவரையெல்லாம் பதவியில் வைத்திருப்பது பெரிய துரோகம்.. உடனே நீக்குங்கள்- OPS பரபரப்பு குற்றச்சாட்டு!!