ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி

0
185

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி

அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல ஆண்டுகள் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார்.

இதே நாளில் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ரீமேக்கான இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ஒரே நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் ஆவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleநாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!
Next articleஇந்த பிக்பாஸ் பிரபலம்தான் சூர்யா- சிவா படத்தின் நாயகியா? வெளியான தகவல்!