உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கலகத் தலைவன்’… டீசர் ரிலீஸ் அப்டேட்!

0
205

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கலகத் தலைவன்’… டீசர் ரிலீஸ் அப்டேட்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் திரைப்படம் கலகத் தலைவன்.

மாமன்னன் திரைப்படத்துக்கு முன்பாகவே  உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் நிறைவடைந்தாலும், அதைப் பற்றிய அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த  படத்துக்கு டைட்டில் ‘கலகத்  தலைவன்’  என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது. உதயநிதியின் அடுத்த ரிலீஸாக இந்த படம் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் டீசரை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டாலும், இந்த படம் அடுத்த ஆண்டுதான் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இசையமைப்புப் பணிகளை தொடங்கியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous articleடாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்?
Next article500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயணம் படமாக்கப்படுவது உறுதி… பிரபல நடிகர் தகவல்!